பிரெக்ஸிற் வாக்கெடுப்பில் தெரேசா-மே தோல்வி!

Report

பிரக்ஸிட் அமல்படுத்துவது தொடர்பாக, பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் தெரசா மேயின் தரப்பு தோல்வி அடைந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது தொடர்பான பிரெக்ஸிற் மீதான வாக்கெடுப்பில் 432 பேர் பிரெக்ஸிற்றிற்கு எதிராகவும் 202 பேர் பிரெக்ஸிற்றிற்கு ஆதரவாகவும் வாக்களித்தனர்.

இதன்மூலம் மேயின் தரப்பு 230 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பாக முடிவு செய்யும் பொதுவாக்கெடுப்பு கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்றது.

இதில் பெரும்பாலானோர் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக ஆதரவு தெரிவித்தனர். பிரிரித்தானியாவின் இந்த வெளியேற்ற முடிவே பிரெக்ஸிற் எனக் குறிப்பிடப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான செயற்பாடு 2019 ஆம் ஆண்டின் மார்ச் 29 ஆம் திகதிக்குள் நிறைவுசெய்யப்பட வேண்டும்.

ஆனால், இதுவரை அதற்கான விதிகள் வகுக்கப்படவில்லையென கூறப்படுகிறது. இதனிடையே பிரெக்ஸிற்றை அமுல்படுத்தத் தேவையான விதிகளை விரைந்து வகுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மே அறிவுறுத்தியிருந்தார்.

மேலும், மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் தோல்வியடைந்தால், அது மன்னிக்க முடியாத நம்பிக்கை மீறல் என்றும் குறிப்பிட்டார்.

இந்நிலையிலேயே, இன்றைய பிரெக்ஸிற் வாக்கெடுப்பில் பிரதமர் மேயின் தரப்பு படுதோல்வியடைந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான காலம் முடிவடைய இன்னும் 10 வாரங்களே உள்ளதால் தெரேசா மே அரசாங்கத்திற்கு இது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1478 total views