போலந்தில் மேயர் குத்திக்கொலை-பொதுமேடையில் அரங்கேறிய கொடூரம்!

Report

போலந்து நாட்டின் டேன்சிக் நகர மேயர், ஒருவர் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவரை வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குறித்த மேயரான பாவெல் அடமோவிச் என்பவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கிறிஸ்துமஸ் அறக்கட்டளை சார்பில், மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அப்போது, குறித்த மேடையை நோக்கி வந்த வாலிபர் ஒருவர் திடீரென மேயரை கத்தியால் குத்தினார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த மேயரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில், மேயருக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமையன்று உயிரிழந்தார்.

இதையடுத்து, குறித்த கொலை தொடர்பாக ஸ்டெபான் என்ற 27 வயது வாலிபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விசாரணையில், அந்த வாலிபர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், தாக்குதலுக்கு அரசியல் பகை காரணம் இல்லை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேயர் கொலையைக் கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

போலந்து நாட்டின் துறைமுக நகரமான டேன்சிக் நகர மேயராக கடந்த 1998-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்தவர்.

இவர், குடியேறிகளின் உரிமைகளுக்காகவும், ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1301 total views