வனீரில் உணவாக விடுதியில் திடீர் துப்பாக்கி சூடு: ஒருவர் படுகாயம்!

Report

வனீரில் உணவாக விடுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில், ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.

குறித்த சம்பவம், வனீரில் மான்ட்ரியல் ரோடு மற்றும் ஹன்னா தெரு பர்கர் கிங் பகுதி உணவாக விடுதி ஒன்றில் புதன்கிழமை இரவு, சுமார் 6- மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில், குறித்த பகுதிக்கு வந்த மூன்று மர்ம நபர்கள், குறித்த ஆண் நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்னர், துப்பாக்கியால் சுட்டனர்.

இதையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிவிக்கப்பட்டத்தின் அடிப்படையில்,விரைந்து வந்த பொலிஸார் காயங்களுடன் இருந்த நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இருப்பினும், சம்பவம் தொடர்புடைய நபர்கள் பொலிஸார் வருவதற்குள், தப்பி சென்று விட்டனர்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தீவிர விசாரணை முன்னெடுத்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த உணவக விடுதி விசாரணை அடிப்படையில் மூடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

185 total views