அந்தமானின் நிகோபார் தீவுகளில் 6.0 -ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Report

அந்தமானின் நிகோபார் தீவுகளில் 6.0 - என்ற ரிக்டர் அளவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்தமான் நிகோபர் தீவுகளில் இன்று காலை 8.43 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கம், கடலில் இருந்து 84 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதிகளவில் வீடுகள் இருக்கும் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சுமார் 15 நிமிடங்கள் நீடித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்பட்டதா? என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

இந்த நிலநடுக்கத்தால், எந்த ஒரு உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என நிலநடுக்கம் பற்றிய அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த நிலநடுக்கமானது நிகோபார் தீவின் 25 கிமீ சுற்றளவு வரை உணரப்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சுனாமி ஏற்படுமோ என அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

251 total views