எத்தியோப்பியாவில் விபத்து 18 பேர் பலி, 33 பேர் காயம்

Report

எத்தியோப்பியாவில் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன், 33 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

எத்தியோப்பியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள வொல்லேகா பகுதியில் பேருந்து ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதன்காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் எனவும் அஞ்சப்படுகின்றது.

விபத்து இடம்பெற்ற பகுதிக்கு விரைந்துள்ள மீட்பு படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில் விபத்து தொடர்பாக அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

305 total views