ஆப்கானிஸ்தானில் தங்கசுரங்கம் சரிந்ததில் 8-பேர் பலியானா சோகம்!

Report

ஆப்கானிஸ்தானில் தங்கசுரங்கம் சரிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன். அதில், 2 பேர் காயம் அடைந்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில், ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு மாநிலமான படகா‌ஷனின் ராகிஸ்தான் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

அங்கு அமைந்துள்ள, தங்கசுரங்கம் ஒன்றில் நேற்று தொழிலாளர்கள் தங்கத்தை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென தங்க சுரங்கம் சரிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 8 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், இரண்டு பேர் சிகிக்சைக்காக மருத்துவமனையில் உள்ளனர்.

இந்த ஆண்டின் இரண்டாவது சுரங்க விபத்து இதுவாகும். இதே மாகாணத்தில் கடந்த 4-ம் தேதி ஏற்பட்ட சுரங்க விபத்தில் 40 பேர் பலியாகினர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள சுரங்கங்களில் பெரும்பாலான சுரங்கங்கள் மிகவும் பழமையானவை. அவை சரியான முறையில் பராமரிக்கப்படாததால், அடிக்கடி விபத்து ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

256 total views