பார்சிலோனா ரயில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு- 100 பேர் படுகாயம்!

Report

ஸ்பெயினில் பார்சினோலாவின் வடமேற்கு பகுதியில் இரு ரயில்கள் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், சுமார் 100 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து, நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெற்றதாக கடலோனியா பிராந்திய அவசர சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது.

இதையடுத்து, குறித்த விபத்தில் சிக்கி 26 வயதான ரயிலின் எஞ்சின் சாரதி சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரயிலில் இருந்த பயணிகளில் 16 நபர்கள் லேசான காயங்களுடனும், 76 உயிருக்கு ஆபத்தான காயங்களுடனும் மருத்துவமனையில் உள்ளனர்.

இந்நிலையில், ஸ்பெயின் பிரதமர் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இரங்கல் வெளியிட்டுள்ளார். அத்துடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற ரயில் விபத்தில் 50 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1023 total views