துருக்கியில் கட்டடம் இடிந்து வீழ்ந்து 21 பேர் பலி

Report

துருக்கியின், இஸ்தான்புல் நகரில் ஏழு மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் 3 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன. இதற்கிடையே, மேலும் 11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், இஸ்தான்புல் நகரில் ஏழு மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழுவினர்.

தொடர்ந்தும் மீட்பு நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாகவும் இதனால் படுகாயமடைந்த பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

துருக்கி, இஸ்தான்புல், கடடடம், விபத்து

3126 total views