ஆப்கானிஸ்தான் வான்தாக்குதலில் கொல்லப்பட்ட 21 அப்பாவி மக்கள்!

Report

ஆப்கானிஸ்தான் ஹெல்மாண்ட் மாகாணத்தில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 21 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் ஹெல்மாண்ட் மாகாணத்தில் 8-ந் தேதி இரவு நடத்தப்பட்ட குறித்த,வான்தாக்குதலில் அப்பாவி பொது மக்கள் 21 பேர் கொன்று குவிக்கப்பட்ட பரிதாப நிலை அரங்கேறி உள்ளது.

இதில்,பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும், குழந்தைகளும் ஆவர். இதுபற்றி அந்தப் பகுதியை சேர்ந்த எம்.பி. முகமது ஹாசிம் அல்கோஜாய் தகவல் தெரிவிக்கும்போது,

ஒரு வான்தாக்குதலில் 13 பேர் பலியாகினர். மற்றொரு வான்தாக்குதலில் 8 பேர் பலியாகினர். இவ்விரு தாக்குதல்களும் கூட்டாக 21 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டார்.

1181 total views