விபத்தில் மாயமான விமானியை தேடுவதற்கு 27000 பவுண்டு வழங்கிய கால்பந்து வீரர்!

Report

அர்ஜென்டினா சேர்ந்த கால்பந்து வீரர் விமான விபத்தில் உயிரிழத்து உடல் மீட்கப்பட்ட நிலையில், விமானியைத் தேடும் பணிகளுக்காக கால்பந்து வீரர் ஒருவர் 27000 பவுண்டு அளித்துள்ளார்.

அர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் எமிலியானோ சலா பிரான்சின் நான்டஸ் அணிக்காக விளையாடி வந்தவர். இவரை, வேல்ஸ் நாட்டின் கார்டிப் கிளப் அணி சமீபத்தில் வாங்கியது.

இதற்கான ஒப்பந்தத்தில் எமிலியானோ கடந்த ஜனவரி 19 அன்று கார்டிப் நகரில் கையெழுத்திட்டார். பின்னர் பிரான்ஸ் திரும்பிய எமிலியானோ சலா, சென்ற விமானம், ஜனவரி 21 மாலை விபத்துக்குள்ளானது.

இதனையடுத்து பொலிஸார் தீவிர தேடுதல் பணியில் எமிலியானோ சலாவின் உடல் கடந்த 7ம் தேதி கடலுக்கடியில் கண்டறியப்பட்டது. இருப்பினும், விமானி டேவிட் இபோட்சன் குறித்து எந்த தகவலும் இன்றும் கிடைக்கவில்லை.

இந்நிலையில்,விமானியை தேடும் பணிக்காக அவரது குடும்பத்தினர் நிதி திரட்டி வருகின்றனர். இதற்காக, சுமார் 3 லட்சம் பவுண்டுகள் நிதி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன விமானியை தேடும் பணிகளுக்காக பிரெஞ்சு கால்பந்து வீரர் கைலன் மப்பே 27000 பவுண்டு (இந்திய ரூபாய் மதிப்பில் 24,87,547) நிதியுதவி வழங்கியுள்ளார்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேரி லிங்கர் 1000 பவுண்டு வழங்கி உள்ளார். மேலும், நேற்று மாலை வரை 7000க்கும் மேற்பட்டோரிடம் இருந்து 1 லட்சத்து 30 ஆயிரம் பவுண்டுகள் வரை நிதி வந்துள்ளது.

1796 total views