38 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற பெண் வழக்கறிஞர்

Report

ஈரான் நாட்டைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் நஸ் ரீன் சோட்டோடே என்பவருக்கு 38 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 148 கசையடிகள் தண்டனை விதித்தும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நஸ் ரீன்,என்ற பெண் வழக்கறிஞர் மனித உரிமைகளுக்கான வழக்கில் ஆஜராகி வாதாடுபவர். இவர் தேசிய பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. நாட்டின் உயர் நிலையில் உள்ள தலைவர்களை மரியாதை குறைவாக அவமதித்துப் பேசியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த காரணத்தால் பெண்கள் உரிமை மற்றும் மனித உரிமைகளுக்காக தமது வாழ்க்கையையே அர்ப்பணித்த நஸ் ரீனுக்கு ஈரான் அரசு 38 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 148 கசையடிகள் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்துள்ளது. ஈரான் அரசின் இந்த செயல் குறித்து உலக அளவில் பல்வேறு அமைப்பினர் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

9000 total views