செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப 1.5 லட்சம் கோடி தேவை

Report

நிலவிற்கும், செவ்வாய் கிரகத்திற்கும் மனிதர்களை அனுப்பும் திட்டங்களுக்கு, 1.5 லட்சம் கோடி ரூபாய் நிதியை, அமெரிக்க அரசிடம், நாசா விண்வெளி ஆய்வு மையம் கேட்டுள்ளது.

நாசா விண்வெளி ஆய்வு மையம், அடுத்த 10 ஆண்டுகளில் நிலவுக்குச் சென்று திரும்பும் வகையிலும், செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் வகையிலும் விண்கலம், ராக்கெட்டுகளை தயாரிக்கும் முதற்கட்டப் பணியில் இறங்கியுள்ளது.

இதற்க்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் நிலவில் தங்கியிருந்து அங்குள்ள மேலும் பல இடங்களில் ஆய்வு மேற்கொள்ள நாசா விண்வெளி ஆய்வு மையம் முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக 1.5 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படுவதால் அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திடம், கேட்டிருப்பதாக நாசா நிர்வாகியான ஜிம் பிரைடன்ஸ்டைன் (Jim Bridenstine) கூறியுள்ளார். இந்த நிதியுதவி கடந்த ஆண்டைக் காட்டிலும் 6 விழுக்காடு அதிகம் என்று நாசா நிர்வாகி தெரிவித்துள்ளார்.

1112 total views