737 மக்ஸ் விமான சேவைகள் தொடர்பில் அமெரிக்காவின் அறிவிப்பு

Report

போயிங் 737 மக்ஸ் விமான சேவைகளை இடைநிறுத்த போவதில்லை என அமெரிக்க விமானப் போக்குவரத்து அதிகாரசபை திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

எத்தியோப்பிய விமான விபத்தை தொடர்ந்து எழுந்த செனட் சபை உறுப்பினர்கள் மற்றும் தொழிலாளர் சங்கங்களின் அழுத்தங்களுக்கு மத்தியில் அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும், போயிங் 737 மக்ஸ் விமானங்களை முடக்கி வைக்கும் செயற்பாடு அடிப்படையற்றது எனவும் அமெரிக்கா கூறியுள்ளது.

அத்துடன், போயிங் 737 மக்ஸ் விமானத்தின் பாதுகாப்புக் குறித்து தாம் முழு நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அமெரிக்க விமானப் போக்குவரத்து அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

எத்தியோப்பியன் எயர்லைன்ஸ் விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த 157 பேர் உயிரிழந்தனர். போயிங் மக்ஸ் 8 ரக விமானம் கடந்த ஐந்து மாதங்களுக்குள் இவ்வாறு பாரிய விபத்திற்குள்ளான இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

குறித்த விபத்தை அடுத்து பிரித்தானியா, சீனா, அவுஸ்ரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல உலக நாடுகள் போயிங் ரக விமானங்களின் சேவைகளை நிறுத்திவைக்கத் துவங்கின.

ஆனால், இவ்விமானங்கள் சேவையில் ஈடுபடுத்துவதற்கு பாதுகாப்பானவை என போயிங் நிறுவனம் தொடர்ந்து உறுதியாக தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

9256 total views