அமெரிக்க சைக்கிள் வீராங்கனை கெல்லி கேட்லின் திடீர் மரணம்..!

Report

அமெரிக்காவின் பிரபல இளம் சைக்கிள் பந்தய வீராங்கனை கெல்லி கேட்லின், திடீரென மரணம் அடைந்த சம்பவம் விளையாட்டு உலகம் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இளம் சைக்கிள் பந்தய வீராங்கனை என்று புகழ் பெற்றவர் கெல்லி கேட்லின்.

2016ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்க அணிக்காக களமிறங்கி வெள்ளிப் பதக்கம் வென்றுஅசத்தினார். 2016ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டுக்குள் நடைபெற்ற உலக கோப்பையின் சைக்கிள் தொடரில் பங்கேற்றார். தொடர்ச்சியாக அமெரிக்க அணி 3 முறை கோப்பையை கைப்பற்ற பெரிதும் உதவினார்.

அமெரிக்காவின் மின்னோஸ்டா நகரைச் சேர்ந்த கேட்லின், படிப்பிலும் திறமையானவர். இதுதவிர வயலின் வாசிப்பதையும் கற்றுள்ளார்.இந்நிலையில், அவரது சகோதரர் தமது தங்கை இறந்துவிட்டார் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அமெரிக்க சைக்கிளிங் தலைவர் ராப் டீமெர்டினி தற்போது உறுதி செய்துள்ளார்.இது தொடர்பாக அமெரிக்க சைக்கிளிங் கமிட்டி இரங்கல் தெரிவித்துள்ளது. அதில், கேட்லியின் இறப்புக்கு வருந்துவதாகவும், அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது அணியினருக்கு தங்களது இரங்கலை தெரிவிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.கேட்லின் இறப்புக்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இளம் வீராங்கனை ஒருவர் திடீரென இறந்திருப்பது அமெரிக்க தடகள விளையாட்டு வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

917 total views