பேஸ்புக், இன்ஸ்டாகிராம், சேவைகள் முடக்கம் - பயனாளர்கள் அவதி!

Report

உலகம் முழுவதும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களின் சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் பேஸ்புக் மாற்றமு இன்ஸ்டாகிராம் செயலி முடங்கியதாக பயனாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

உலகம் முழுவதிலும் 2 பில்லியன் பயனாளர்களை கொண்டுள்ள பேஸ்புக், உலகம் முழுவதிலும் பல இடங்களில் முடங்கியது.

இதனால், அவதி அடைந்த பயனாளர்கள் டுவிட்டரில் தங்கள் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தனர்.

இது குறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள பேஸ்புக் நிறுவனம் பேஸ்புக் மற்றும் அதனுடைய இணை அப்ளிகேஷன்களை பயன்படுத்துவதில், சிக்கல்கள் இருப்பதாக பயனாளர்கள் கூறியதை நாங்கள் அறிந்துள்ளோம்.

பாதிக்கப்பட்ட சேவையை சீரமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சேவை விரைவில் சரி செய்யப்படும் எனவும், இது சைபர் தாக்குதலால் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டவுன்டி டெக்டர் காம் இணையதள தரவுகளின் படி, வட அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் பேஸ்புக் பக்கம் முடங்கியதாக பயனாளர்கள் அதிக அளவில் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சர்வர் பிரச்சினையால், பேஸ்புக் முடங்கியது. அதேபோல், செப்டம்பரிலும் நெட்வொர்க் பிரச்சினையால் பேஸ்புக்கில் பிரச்சினை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

993 total views