குழந்தையை விமான நிலையத்தில் தவறவிட்ட தாய் -பின்னர் பாதியில் திரும்பிய சவுதி விமானம்!

Report

குழந்தை ஒன்றுக்காக பயணத்தை ஆரம்பித்த விமானம் ஒன்று பாதியிலேயே திரும்பிய சம்பவம் சவுதியில் இடம் பெற்றுள்ளது.

சவுதியில் இருந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூரை நோக்கிச் சென்று கொண்டிருந்த விமானமே இவ்வாறு பாதியில் திரும்பியுள்ளது.

குறித்த சம்பவத்தில், விமானத்தில் பயணம் செய்த தாய் ஒருவர் சவுதி அரேபியாவில் உள்ள கிங் அப்துல் அஸிஸ் அனைத்துலக விமான நிலையத்தில் தம் குழந்தையை தவறுதலாக விட்டு விட்டு வந்ததாகவும் தான் திரும்ப வேண்டும் எனவும் விமான பணியாட்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இது குறித்து விமானிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது, அவர் உடனடியாக விமான நிலையத்திற்குத் திரும்பிச் செல்ல முடிவெடுத்துள்ளார்.

இதற்காக மீண்டும் திரும்புவதற்கான சிறப்பு அனுமதியை போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரியிடம் பெற்றுக் கொண்டார்.

குழந்தையை விமான நிலையத்திலேயே விட்டுச் சென்ற தாய் தொடர்ந்து பயணம் செய்ய மறுத்ததாகவும் விமானி அதிகாரியிடம் பகிர்ந்து கொண்டார்.

இருவருக்கும் இடையே நடைபெற்ற உரையாடல், காணொளியாகப் பதிவாகி இணையத்தில் வெளியாகியுள்ளது.

எனினும், குழந்தை எவ்வாறு தாயைப் பிரிந்தது என்பது தொடர்பான விடயங்கள் வெளியாகவில்லை.

2461 total views