பறக்கும் மோட்டார் சைக்கிள்….!!

Report

ஜெட்பேக் ஏவியேஷன் என்ற அமெரிக்க நிறுவனம் பறக்கும் மோட்டார் சைக்கிளை உருவாக்கி வருவதாக தகவல் தெரிவித்துள்ளது.

இன்றைய நவீன உலகில் ஒவ்வொரு நிறுவனமும் புது விதமான டெக்னாலஜியை கண்டுபிடித்து அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள கலி ஃபோர்னியாவைச் சேர்ந்த ஜெட்பேக் ஏவியேஷன் நிறுவனம், சயின்ஸ் ஃபிக் ஷன் படங்களில் வரும் பறக்கும் மோட்டார் சைக்கிள்களை உண்மையில் நிஜ வாழ்க்கையில் சாத்தியமாக்க முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் அதற்க்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

விமான தயாரிப்பின் தொழில் நுட்ப அடிப்படையில் திருத்தியமைக்கப்பட்ட ஜெட் எஞ்சின்களைக் கொண்டு பறக்கும் மோட்டார் சைக்கிள்கள் தயாரிக்கப்படும் என ஜெட்பேக் ஏவியேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் பறக்கும் மோட்டார் சைக்கிள்கள், அதிகபட்சமாக மணிக்கு 150 கி.மீட்டர் வேகத்திலும் 15,ooo அடி உயரத்திலும் செல்லும் திறனுடையவையாக இருக்கும் என்றும், அவற்றின் விலை 3,80,000 டாலராக இருக்கும் என்றும் தெரிவித்துள்ள அந்த நிறுவனம் அடுத்த ஆண்டில் இந்த புது விதமான மோட்டார் சைக்கிள்களை வாடிக்கையாளர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகதக் கூறியுள்ளது.

1373 total views