பிரேசில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி

Report

பிரேசில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பாடசாலை மாணவர்கள் உள்ளிட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

துப்பாக்கசிச் சூடு நடத்தப்பட்ட பிரேசிலின் சாவ் பாலோ (SAO PAULO) பகுதியின் SUZANO என்ற பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் எனப் பலர் அணிதிரண்டு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

உள்ளூர் நேரப்படி நேற்று காலை 9.30 மணியளவில் சாவ் பாலோவில் உள்ள ராவுல் பொது பாடசாலை வளாகத்திற்குள் நுழைந்த இரு இளைஞர்கள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐந்து மாணவர்கள் உட்பட எட்டுப்பேர் உயிரிழந்திருந்த நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞர்கள் தம்மைத் தாமே சுட்டுத் தற்கொலை செய்துள்ளதால் அந்த எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை இச்சம்பவம் இடம்பெற்ற சாவ் பாலோவில் பகுதியில் மூன்று நாட்களுக்கு துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

1100 total views