சிகிச்சைக்கு வந்த 114 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த டாக்டர் கைது!

Report

தன்னிடம் சிகிச்சைக்கு வந்த 114 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த டாக்டர் கைது செய்யப்பட்டார்.

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த 114 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு இரையாக்கிய மருத்துவர் சிக்கியுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு, பெர்ன் நீதிமன்றத்தால் 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால், அவரது நடவடிக்கைகளை கண்காணிக்க வலியுறுத்திய நீதிமன்றம், குறிப்பிட்ட அளவீடுகளை மீறினால், அந்த மருத்துவரை கைது செய்யலாம் என தீர்ப்பளித்திருந்தது.

இந்த நிலையில், கடந்த வாரம் அவரது நடவடிக்கை காரணமாக குறித்த மருத்துவரை கைது செய்ய நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போது 62 வயதான குறித்த நபர் மீது சுமார் 114 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்கான ஆதாரம் சிக்கியுள்ளதாக நீதிமன்றம், கூறியுள்ளது.

மேலும், 33 வழக்குகள் அவரது பெயரில் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. வழக்கு நிரூபணமான 2014 ஆம் ஆண்டு, அவரை கைது செய்வதற்கான கால அவகாசம் கோரப்பட்டிருந்தது.

தற்போது உளவியல் நிபுணர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில், அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

1127 total views