சிறந்த நாட்டிற்கான குறியீடு தரவரிசை பட்டியலில் நோர்வே முதலிடம்!

Report

பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க உலக நாடுகள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளின் அடிப்படையில், சிறந்த நாட்டிற்கான குறியீடு தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு நாட்டின் பொருளியல் நிலை, அந்தநாடு மேற்கொள்ளும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நடவடிக்கைகள், அதன் எரிசக்திப் பயன்பாட்டில் எத்தனை சதவீதம் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி உள்ளிட்ட விடயங்களின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய வெளியிடப்பட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் நோர்வே முதலிடத்தினை பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் நோர்வே முதலிடத்தினை பிடிக்க காரணம் என்ன?

நோர்வே அரசாங்கம் 2030ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை வெகுவாகக் குறைக்க உறுதியளித்துள்ளது.

எனினும், திறந்தவெளி வாழ்க்கை மீதான மக்களின் ஈடுபாடுதான் முக்கிய காரணம் என்கிறது ஆய்வு முடிவுகள்.

வெளியில் நேரம் செலவழித்தால் உடல்நலமும் மகிழ்ச்சியும் கூடும் என்பது நோர்வே வாழ் மக்களின் நம்பிக்கை ஆகும்.

ஒரு பக்கம், பசுமை முயற்சிகள், மறுபக்கம் எண்ணெய் எரிவாயு உற்பத்தியிலும் நோர்வே முக்கிய இடம் வகிக்கிறது. இது இரட்டை நிலை என்ற குறை கூறலும் இல்லாமலில்லை.

எனினும், இயற்கையோடு பிணைந்த வாழ்வை அதிகம் விரும்பும் நோர்வே மக்களின் பசுமைச் சிந்தனை நாட்டிற்கு நல்ல பெயரினை பெற்றுத்தந்துள்ளது.

இதேவேளை, சிறந்த நாட்டுக்கான குறியீட்டுப் பட்டியலில் போர்த்துக்கல் 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளதுடன், உருகுவே, கென்யா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் முறையே 3, 4, 5ஆம் இடங்களை பிடித்துள்ளன.

524 total views