பொய் புகார் கொடுத்த இந்திய பெண்ணுக்கு சிறை விதித்து சிங்கப்பூர் கோர்ட்டு அதிரடி!

Report

விபசாரத்தில் ஈடுபட வற்புறுத்தியதாக தம்பதி மீது பொய் புகார் கொடுத்த இந்திய பெண்ணுக்கு சிறை தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தியாவை சேர்ந்தவர் கலைச் செல்வி முருகையன் (24). இவர் சிங்கப்பூரில் தனது கணவருடன் தங்கியிருந்தார். இந்த நிலையில், அவரை விட்டு கணவர் பிரிந்து விட்டார்.

எனவே, சிங்கப்பூரில் வாழவழி தெரியாத அவர் அங்கு தனக்கு பழக்கமான கணவன், மனைவியிடம் உதவி கேட்டார்.

அப்போது அவர்கள் தன்னை வலுக்கட்டாயமாக விபசார தொழிலில் ஈடுபடுத்த முயன்றதாக கலைச்செல்வி மத்திய போலீஸ் டிவிசன் இன்ஸ்பெக்டர் முகமது ரபி, முகமது ஈசாக்கிடம் புகார் கொடுத்தார்.

எனவே கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே புகார் மீது நடத்தப்பட்ட விசாரணையில் தம்பதி மீது கலைச்செல்வி கொடுத்தது பொய் புகார் என தெரிய வந்தது.

அதை தொடர்ந்து, கலைச்செல்வி மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு 2 வாரங்கள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

பொய் புகார் வழக்கில் கலைச்செல்விக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனையும், சிங்கப்பூர் பணம் 5 ஆயிரம் அபராதமும் விதிக்க வேண்டும்.

ஆனால், இந்தியாவில் உள்ள தனது குடும்பத்தினரை காப்பாற்றும் பொறுப்பு தனக்கு உள்ளது என்றும், எனவே தனக்கு குறைந்த பட்ச தண்டனை வழங்குமாறும், கலைச்செல்வி கோரிக்கை விடுத்தார். எனவே, அவரது கோரிக்கை ஏற்கப்பட்டது.

1176 total views