பிரதமரின் ஒப்பந்தத்தை மீண்டும் தோற்கடிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதி!

Report

ஜூன் மாத ஆரம்பத்தில் நான்காவது முறையாக நாடாளுமன்ற வாக்கெடுப்புக்கு முன்வைக்கப்படவுள்ள பிரதமர் தெரேசா மே-யின் பிரெக்ஸிற் உடன்படிக்கையை மீண்டும் தோற்கடிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

பிரெக்சிற்றுக்கு ஆதரவான கொன்சர் வேற்றிவ் கட்சி உறுப்பினர்கள் வட அயர்லாந்தின் ஜனநாயக ஒன்றியக் கட்சியுடன் (DUP) இணைந்து பிரதமரின் உடன்படிக்கைக்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதே போன்று. பிரதமர் தெரேசா மே-யின் பிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கு ஆதரவளிக்கப் போவதில்லையென ஸ்கொட்டிஷ் தேசிய கட்சியும் அறிவித்துள்ளது.

பிரதமரின் உடன்படிக்கையின்படி பிரெக்ஸிற்றின் பின்னரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டங்களை பிரித்தானியா பின்பற்ற வேண்டிய நிலை ஏற்படுமென்ற காரணத்தாலேயே அதை எதிர்ப்பதாக DUP வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கு தொழிற்கட்சியின் ஆதரவைப் பெறுவதற்காக தொழிற்கட்சியுடனான பிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகளை ஆளுங்கட்சி தொடர்ந்தும் முன்னெடுத்து வருகிறது.

774 total views