6 நாட்கள் 6 முறை பின் பற்றவேண்டும்: உலக முன்னணி பணக்காரர் ஜாக்-மா கருத்தால் சர்சை!

Report

உலகின் முன்னணி ஆன்லைன் வணிக நிறுவனங்களில் ஒன்றான அலிபாபா குரூப் கம்பெனியின் நிறுவனர் ஜாக் மா. சீனாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான இவர் தனது நிறுவன பணியாளர்கள் ‘669’(6 நாள் 6 முறை) உறவு கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

54-வயது ஆகும் ஜாக் மா இந்த கருத்தினை தனது நிறுவன ஊழியர்களின் பிரம்மாண்ட திருமண நிகழ்வில் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பணியாட்கள் ‘996’ என்ற கணக்கில் ஐயராது பணியாற்ற வேண்டும் என இவர் தெரிவித்தது பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில் தற்போது ‘669’ முறை உறவு கருத்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக,‘996’ முறை பற்றி ஜாக் மா தெரிவிக்கையில்., "என்னைப் பொறுத்தவரை தொழிலார்கள் ஓவர்டைம் வேலைபார்ப்பது ஆசீர்வதிக்கப்பட்ட ஒன்றாகத்தான் பார்க்கிறேன். 996 என்ற அடிப்படையில் வேலைசெய்ய வேண்டும். (996 என்பது காலை 9 முதல் மாலை 9 மணிவரை என வாரத்திற்கு 6 நாள்கள் வேலைசெய்ய வேண்டும் என்பதாகும்).

இளைஞர்கள், இந்த வயதில் ஒருநாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்யவில்லை என்றால், வேறு எப்போது செய்யப்போகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் தற்போது திருமண வாழ்வின் முக்கியத்துவத்தை அடைய தம்பதியர்கள் அணைவரும் 6 நாள் 6 முறை உறவு என்னும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் வீட்டில் 669 அடிப்படையில் வேலை செய்யவும், அலுவலகத்தில் 996 அடிப்படையில் வேலை செய்யவும் சக்தி பெற்றிருத்தல் அவசியம் என விழா மேடையில் ஜாக் மா தெரிவித்துள்ளது தற்போது இணையத்தில் விவாத பொருளாய் உருமாறியுள்ளது.

2047 total views