இணையத்தில் வைரலாகும் கரப்பான்பூச்சி சேலஞ்ச்! நீங்களே பாருங்க

Report

இணையத்தில் தற்போது, 'கரப்பான்பூச்சி சேலஞ்ச்' என்ற பெயரில் ஒரு புதிய சவால் வைரலாக பரவி வருகிறது வருகிறது.

கரப்பான் பூச்சியைப் பார்த்தாலே சிலருக்குப் பயமாகவும் அருவருப்பாகவும் இருக்கும். தூரத்தில அதைப் பார்த்தாலே பல அடி தூரம் தெறித்து ஓடுபவர்களும் உண்டு.

ஆனால், அதை உயிருடன் கையில் பிடித்து முகத்தில் ஓடவிட்டு செல்ஃபி எடுத்து அதை மற்றவர்களுக்கும் பகிர்ந்து அவர்களுக்கு சவால் விடுகிறார்கள். இதற்கு ‘காக்ரோச் சேலஞ்ச்’ என்றும் பெயரிட்டுள்ளனர்.

சில மாதங்களாகவே இது போன்ற நிறைய சவால்கள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த வரிசையில் முதலில் வந்தது ‘ப்ளூ வேல் சேலஞ்ச்’. இந்தச் செயலியை போனில் பதிவிறக்கம் செய்த பலர் அந்தச் செயலி சொல்வதைச் கேட்டு பரிதாபமாக உயிரை விட்டனர். பின்னர் அந்தச் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது.

அடுத்ததாக ஐஸ் பக்கெட் சேலஞ்ச். ஒரு பக்கெட்டில் குளிர்ந்த நீரை எடுத்து தலையில் ஊற்றிக்கொண்டு அதை காணொளி எடுத்து இணையத்தில் பகிர வேண்டும். பெரிய ஆபத்தில்லாத இந்த சவாலை பலரும் செய்து அதன் காணொளியினை பகிர்ந்தனர்.

கி கி சேலஞ்ச் என்பது காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது காரை ஓட்டுபவர் காரில் இருந்து கீழே இறங்கி நடனமாடி அதை காணொளி எடுத்து இணையத்தில் பகிர வேண்டும். ஆபத்தான இந்த சவாலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அந்த வகையில், தற்போது புதிதாக கரப்பான் பூச்சி சேலஞ்ச் என்ற ஒன்று உருவாகியுள்ளது. இந்த கரப்பான் பூச்சி சேலஞ்சை முதன்முதலாக பர்மாவில் உள்ள அலெக்ஸ் அங் என்பவர் தான் ஆரம்பித்து வைத்தார்.

தன் முகத்தில் கரப்பான் பூச்சி இருப்பது போன்ற படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு அதன் கீழ் ‘இந்தப் புதிய சேலஞ்சை உங்களால் செய்ய முடியுமா’ என்று பதிவிட்டுள்ளார்.

இதைப் பார்த்து அவரது நண்பர்கள் பலரும் இந்த சேலஞ்சை செய்ய, தற்போது அது உலகம் முழுவதும் பரவத் தொடங்கியுள்ளது. அடுத்து பாம்பு சேலஞ்ச், பல்லி சேலஞ்ச் என்று எதுவும் வராமல் இருந்தால் நல்லது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

1506 total views