காதலிக்காக விமானத்த கடத்த முயற்சித்த தொழிலதிபர் - பின்னர் அவருக்கு கிடைத்த கடும் தண்டனை!

Report

மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் பிர்ஜூ சல்லா என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30-ம் தேதி, ஜெட் ஏர்வேஸ் விமானத்தை கடத்தவுள்ளதாக விமான நிலையத்தின் கழிவறையிலுள்ள டிஸ்யூ பேப்பரில் எழுதி வைத்தார்.

குறித்த சம்பவத்தில், மும்பை - டெல்லி செல்லும் விமானமான, 9W339 என்ற எண்ணுடைய அந்த விமானத்தில் தான் அந்த துரதிஷ்டவசமான நடந்திருக்கிறது.

அதுவும் அந்த விமானத்தில் வணிக வகுப்பு அருகில் உள்ள கழிவறையில் தான் இந்த செய்தியை எழுதி வைத்துள்ளார் பிர்ஜூ சல்லா.

இதையடுத்து, மும்பை - டெல்லி செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தை தான் கடத்தவுள்ளதாக ஆங்கிலம் மற்றும் உருதுவில் எழுதியிருந்தாராம்.

தொழிலதிபர் பிர்ஜு சல்லா எழுதிய இந்த மிரட்டலால், அந்த விமானம் அவசரமாக அகமதாபாத் விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டு, பின்னர் குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து முதன்முறையாக விமானத்தில் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நபர் பட்டியலில் பிர்ஜூ சல்லா சேர்க்கப்பட்டார்.

மேலும், விமானக் கடத்தலுக்கு எதிரான சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டது. பிர்ஜூ சல்லாவிடம் நடந்த விசாரணையில், விமானத்தை கடத்துவதாக மிரட்டல் விடுத்ததை ஒப்புக் கொண்டார்.

மேலும் அவர் அளித்த வாக்கு மூலத்தில், இந்த மிரட்டலின் காரணமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் டெல்லியில் செயல்படும் அலுவலகத்தை மூடிவிடும்.

அதனை மூடிவிட்டால் டெல்லியில் பணியாற்றும் தனது காதலி மும்பை திரும்பிவிடுவார் என்று நம்பினேன் கூலாக பதில் கூறியிருந்திருக்கிறார்.

அதோடு ஜெட் ஏர்வேஸ் விமானத்தை ஹைஜேக் செய்வேன் என்று மிரட்டிய இந்த தொழிலதிபருக்கு சிறப்பு தேசிய புலனாய்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.

அதுமட்டும் அல்ல 5 கோடி ரூபாய் அபராதமும் தண்டனையாக விதித்து தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதோடு இந்த வழக்கை விசாரித்த சிறப்பு தேசிய புலனாய்வு நீதிமன்றத்தின் நீதிபதி கே.எம் டேவ், இந்த அபராதத் தொகையை கடத்தப்படுவதாக மிரட்டல் விடுக்கப்பட்ட விமானத்தில் பயணித்தவர்களுக்கு பிரித்து அளிக்கவேண்டும் என்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளராம்.

1211 total views