பிக்-பென் கடிகாரம் நிர்மாணிக்கப்பட்டு 160 ஆண்டுகள் பூர்த்தி!

Report

பிரித்தானியாவின் புகழ்பெற்ற ‘பிக் பென்’ கடிகாரம் முதன்முதலாக ஒலி எழுப்பி இன்றுடன் (ஜுலை 11) 160 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன.

எனினும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் கொண்டாட ‘பிக் பென்’ கடிகாரம் ஒலி எழுப்பாது. அங்கு மறு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதே அதற்கு காரணமாகும்.

கடந்த 2017,ஆம் ஆண்டு ஆரம்பமான மறுசீரமைப்புப் பணிகள், 2021ஆம் ஆண்டே நிறைவடையும்.

96 மீட்டர் உயரமுள்ள கடிகாரம் நீண்ட காலம் நல்ல நிலையில் நீடிக்க மறுசீரமைப்பு அவசியம் என்று தெரிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து மறுசீரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் வடக்கு முனையில் அமைக்கப்பட்டுள்ள எலிசபெத் கோபுரத்தில் பொருத்தப்பட்டுள்ள மணிக்கூடே இந்த ‘பிக் பென்’. இதற்கு இன்னொரு புனைபெயர் உண்டு. அது ‘கிரேட் பெல்’ ஆகும்.

269 total views