பாகிஸ்தானில் ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் உயிரிழப்பு! 80 பேர் காயம்

Report

பாகிஸ்தானில் தென்கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 10 பேர் பலியாகினர். மேலும், சுமார் 80-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இந்த ரயில் விபத்து குறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் தரப்பில், ‘பாகிஸ்தானில் கவுட்டாவில் வந்த அக்பர் எக்ஸ்பிரஸ் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள வல்ஹார் ரயில்வே நிலையத்தில் மற்றொரு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியாகினர். மேலும், 80க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது என்றார்.

இந்த விபத்து குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில், ரயில் விபத்து மிகுந்த சோகத்தை அளித்துள்ளது.

விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய எனது பிரார்த்தனைகள் இருக்கும்.

விபத்து தொடர்பாக வேண்டிய அவசர நடவடிக்கைகளை எடுக்கவும் ரயில்வே அமைச்சரை கேட்டுக் கொண்டு இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

267 total views