ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி

Report

ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக கடந்த 2017-ம் ஆண்டு இறுதியில் அப்போதைய பிரதமர் ஹைதர் அல்-அபாடி அறிவித்தார். ஆனால், சமீப,காலமாக அங்கு ஐ.எஸ். அமைப்பு மீண்டும் தலைதூக்க தொடங்கி உள்ளது. அவர்களை ஒடுக்க ஈராக் ராணுவ வீரர்கள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், ஈராக்கில் சிறப்பு அதிரடிப்படையினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், ஈராக்கில் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 11 பேர் கொல்லப்பட்டனர். 8 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகள் 100க்கும் மேற்பட்டவை அழிக்கப்பட்டன. அவர்களிடம் இருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 54 வெடிமருந்து கிடங்குகள் அழிக்கப்பட்டன என பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

306 total views