யூதர் என நினைத்து தாக்குதல்: குற்றவாளிக்கு 30 மாத சிறை

Report

அமெரிக்காவில் யூதர் என நினைத்து தாக்குதல் நடத்திய குற்றவாளிக்கு 30 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் ஒஹியோ நகரில் ஹியூபர் ஹைட்ஸ் பகுதியில் வசித்து வருபவர் இஜ்மிர் கோச். கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரியில் சின்சின்னாட்டி உணவு விடுதிக்கு தனது நண்பர்களுடன் இவர் சென்றுள்ளார். பின்னர் அவர் உணவு விடுதிக்கு வெளியே நின்று கொண்டு சத்தமுடன், நான் யூதர்கள் அனைவரையும் கொல்ல விரும்புகிறேன்.

சின்சின்னாட்டி உணவு விடுதிக்கு வெளியே உள்ள யூதர்களை கத்தியால் குத்த விரும்புகிறேன் என கூச்சல் போட்டுள்ளார். இதன்பின் அங்கிருந்த நபரொருவரை யூதர் என நினைத்து கொண்டு கோச் அடித்து, உதைத்து உள்ளார். அவருடன் இணைந்து நண்பர்களும் அந்த நபரை அடித்து உள்ளனர். இதில், அவரது முகம் மற்றும் நெஞ்சு பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டு உள்ளன.

உண்மையில் அந்த நபர் யூதர் இல்லை. மக்களுடன் மக்களாக நின்றிருந்தவர். இது பற்றிய வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் நடந்தது. இதில், அமெரிக்க வெறுப்புணர்வு குற்றங்களுக்கான சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கோச்சுக்கு 30 மாதங்கள் வரை சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

310 total views