கடலில் விழுந்தது வேகா ராக்கெட்: ஓர் அதிர்ச்சி பின்னணி!

Report

ஐக்கிய அரபு அமீரகத்தின் செயற்கைக்கோளுடன் ஏந்தி விண்ணில் செலுத்தப்பட்ட பிரான்ஸின் வேகா ராக்கெட், கடலில் விழுந்து நொறுங்கியது.

வர்த்தக ரீதியில் செயற்கைக்கோள்களை முதன்முறையாக விண்ணில் செலுத்திய ஏரியன்ஸ்பேஸ் நிறுவனத்தின் அந்த வகை ராக்கெட், கடந்த 2012-ஆண்டு அது அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இதுவரை ஒரு முறை கூட தோல்வியடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு அமீரக ராணுவத்துக்கு உதவியாகவும், மிகத் துல்லியமான படங்களை எடுத்து வெளியிடவும் வடிவமைக்கப்பட்ட ஃபால்கன்ஐ-1 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்காக ஃபிரெஞ்சு கயானா பகுதியிலுள்ள ஏவுதளத்திலிருந்து அந்த ராக்கெட் புதன்கிழமை இரவு செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

2309 total views