பாகிஸ்தான் கடும் கனமழையில் சிக்கி 28 பேர் பலி - சுமார் 150 வீடுகள் சேதம்!

Report

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கனமழைக்கு 28 பேர் பலியானார்கள். வெள்ளத்தில் சிக்கி சுமார் 150 வீடுகள் சேதம் அடைந்தன.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள நீலம் பள்ளத்தாக்கு பகுதியில் பெருமேகங்கள் வெடிப்பு காரணமாக இடைவிடாமல் கனமழை கொட்டித்தீர்த்தது.

இந்த பேய் மழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் மற்றும் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. குறிப்பாக லஸ்வா என்ற பகுதி பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

அங்கு சுமார் 150 வீடுகள் வெள்ளத்தில் சிக்கி சேதம் அடைந்தன. மேலும், 2 மசூதிகள் முற்றிலுமாக வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 28 பேர் பலியானார்கள்.

1107 total views