நிதிப் பற்றாக்குறையுடன் இயங்கும் ஐ.நா -செயலாளர் கவலை!

Report

ஐக்கிய நாடுகள் சபை நிதிப் பற்றாக்குறையுடன் இயங்கி வருவதாக அதன் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

அத்துடன் ஐ.நா.சபை 230 மில்லியன் டொலர் நிதிப் பற்றாக்குறையுடன் இயங்கி வருவதாகவும், இம்மாத இறுதிக்குள் மீதமுள்ள நிதியும் தீர்ந்துவிடும் என்ற அபாயம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளதாக ஊடகங்கள் கூறியுள்ளன.

மேலும் எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதிக்குள் சபையை நடத்த பணம் இல்லாமல் போகக்கூடும் எனவும் அன்டோனியோ குட்ரெஸ் அச்சம் வெளியிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஐ.நா. செயலகத்தில் உள்ள 37,000 ஊழியர்களுக்காக சம்பளம் மற்றும் உரிமைகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை ஐ.நாவுக்கு வழங்க வேண்டிய நிதிகளை உறுப்பு நாடுகள் முறையாக செலுத்தவில்லையெனவும் அன்டோனியோ குட்ரெஸ் குற்றம் சுமத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

710 total views