சீனாவில் பால்கனியில் தலை சிக்கி தவித்த சிறுவன் - அதன்பின்னர் நடந்தது

Report

சீனாவில், வீட்டு ஜன்னலின் பக்கவாட்டில் உள்ள கிரில் பால்கனியில் தலை சிக்கி தவித்த சிறுவனை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

ஷான்டாங் மாகாணம் லின்யீ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 4 வயது சிறுவன் தனது பெற்றோர் மற்றும் தாத்தாவுடன் வசித்து வருகிறான்.

குறித்த சிறுவன் நேற்று தனது தாத்தாவுடன் தூங்கிக்கொண்டிருந்தபோது, திடீரென விழித்து வீட்டு ஜன்னல் அருகே சென்றுள்ளான்.

அதன் பின்னர் ஜன்னல் கண்ணாடி கதவை நீக்கி அவன், அதன் மீது ஏறியதில், நிலைத்தடுமாறி ஜன்னலின் மறுபுறம் இருந்த கிரில் பால்கனியில் விழுந்து கம்பிகளுக்கு இடையே சிக்கிகொண்டான்.

இந்த நிலையில் அவனது அலறல் சத்தம் கேட்டு வந்த அவனது தாத்தா, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து, அக்கம்பக்கத்தினரையும் உதவிக்கு அழைத்துள்ளார்.

இதனையடுத்து அங்கு விரைந்த வீரர்கள், சிறுவனை பத்திரமாக மீட்டுள்ளனர்.

983 total views