சோமாலியாவில் 25 பேர் பலி

Report

சோமாலியா நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்ற நிலையில் மழை வெள்ளம் காரணமாக பல்வேறு இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிகபட்டுள்ளது.

இந்நிலையில் அங்கு இன்னும் ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் என சோமாலியா நீர் மற்றும் நில தகவல் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கனமழை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து இதுவரை 2,70,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவசர நிலையில் உயிர்காக்கும் அறிவுரைகள் சோமாலியா அரசிற்கு வழங்கப்படுகிறது.

இதேவேளை மழைவெள்ளம் காரணமாக பொதுமக்கள் 25 பேர் உயிரிழந்துள்ளதோடு 47 பேர் காயமடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் அங்கு 5,47,000-க்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதோடு ஷாபெல் ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில் பெல்ட்வெய்ன் நகரத்தில் அபாய அளவை தாண்டியுள்ளது.

இதன் விளைவாக 2,32,000 பேர் சொந்த இருப்பிடங்களை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.

இதேவேளை ஹிர்ஷாபெல்லே, ஜுபாலாந்து மற்றும் தென்மேற்கு மாநிலங்களில் உள்ள ஜூபா மற்றும் ஷாபெல் நதிகளின் அருகில் உள்ள பெரும்பாலான கரையோர பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக மனிதாபிமான விவகார ஒருங்கிணைப்புக்கான ஐ.நா. அலுவலகம் (OCHA) தெரிவித்துள்ளது.

940 total views