சர்வதேச நாடுகளை பிரமிப்படைய செய்துள்ள சீனா!

Report

உலக நாடுகள் பல 5ஜி சேவையை வழங்கவே திண்டாடி வரும் நிலையில் சீனா 6ஜி சேவைக்கான பணிகளை துவக்கி யுள்ளது.

சீனாவில் 5ஜி சேவை வழங்க துவங்கி ஒரு மாதம்கூட ஆகாத நிலையில் 6ஜி சேவைக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் அமெரிக்கா, சீனா, பிரிட்டன், கொரியா, உள்ளிட்ட சில நாடுகள் மட்டுமே 5ஜி சேவையை வழங்கி வருகிறது.

இந்நிலையில் 5ஜி சேவையை, முழுமையாக பயன்படுத்த தொழில்நுட்ப வல்லுனர்கள் திணறிவருகின்ற நிலையில் , சீனா 6ஜி சேவையை தொடங்கும் தொழில்நுட்பத்தை ஆய்வு செய்ய தொடங்கி உள்ளது.

இதற்கான அறிவிப்பை சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் அமைச்சகம். தெரிவித்துள்ளது.

அத்துடன் இதை கண்காணிக்க இரண்டு குழுக்களையும் அமைத்துள்ளது.

இதில் முதல் குழு, 6ஜி சேவைக்கான பயன்பாடுகளை ஆய்வு செய்யும். இரண்டாவது குழு தொழில்நுட்பத்திற்கு தேவையான அறிவுரைகளை வழங்கும், என்பதுடன் இக்குழுவில் 37 பல்கலைக்கழகங்களைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்களும் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆய்வாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.

செப்டம்பர் மாதத்திலிருந்து ஆரம்பகட்டப் பணிகளை துவங்கி விட்டதாக ஹவாய் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடக்க பணிகள்தான் என்பதால் முழுவதும் பயன்பாட்டிற்கு வர இன்னும் சில மாதங்கள் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதேவேளை மற்ற நாடுகள் 5ஜி சேவையை வழங்கவே போராடி வரும் நிலையில் சீனா, 6ஜி சேவையில் இறங்கியிருப்பது, சர்வதேச நாடுகளை பிரமிப்படைய செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1782 total views