உலகிலேயே டைபோய்ட் காய்ச்சலுக்கு முதல்முறையாக புதிய தடுப்பூசியை அறிமுகம் செய்த நாடு

Report

உலகிலேயே டைபோய்ட் காய்ச்சலுக்கு முதன் முறையாக பாகிஸ்தான் தடுப்பூசியைப் அறிமுகம் செய்துள்ளது.

பாகிஸ்தான் சிந்து மாநிலத்தில் டைபோய்ட் காய்ச்சலில் ஏராளமானோர் ஆண்டுதோறும் உயிரிழப்பதால், அங்கு முதன்முதலில் இந்த தடுப்பூசியைப் பாகிஸ்தான் அறிமுகம்செய்துள்ளது

கடந்த 2016ம் ஆண்டில் இருந்து தடுப்பூசிகளால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சல்மோனெல்லா டைபி பக்டீரியா எனப்படும் சூப்பர்பக் டைபோய்ட் காய்ச்சல் பரவியது.

இந்நிலையில் இந்த சூப்பர் பக் டைபோய்ட் காய்ச்சலால் சிந்து மாநிலத்தில் 11 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதுடன் உயிரிழப்பும் 20 சதவீதம் அதிகரித்தது.

இதையடுத்து சூப்பர்பக் டைபோய்ட் காய்ச்சலுக்காக “தி டைபோய்ட் கான்ஜுகேட் வாக்ஸின்”(டிசிவி) தடுப்பூசியை பாகிஸ்தான் அறிமுகம் செய்துள்ளது.

இந்த தடுப்பூசி அறிமுக நிகழ்ச்சி கராச்சி நகரில் நேற்றையதினம் நடந்தது.

பிரதமர் இம்ரான் கானின் சுகாதாரத்துறை தனிப்பட்ட உதவியாளருமான ஜாபர் மிர்சா, சுகாதாரத்துறை அமைச்சர் அஸ்ரா பாஸல் ஆகியோர் நிகழ்வினை தொடங்கி வைத்தனர்.

அத்துடன் இந்த தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனமும் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதுகுறித்து ஜாபர் மிர்சா கூறுகையில், “தொடக்கத்தில் டைபோய்ட் காய்ச்சலுக்கான தடுப்பூசியை சிந்து மாநிலத்திலும், அதன்பின் படிப்படியாக அனைத்து மாநிலங்களிலும் குழந்தைகளுக்கு போடுவதற்கு விரிவுபடுத்துவோம் எனவும் கூறியுள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டில் 63 சதவீத டைபோய்ட் நோயாளிகளில் 70 சதவீதம் இறந்தவர்களில் 15 வயதுக்கு கீழ்பட்டவர்கள்தான் அதிகம் என்றும், குழந்தைகளின் மரணத்தைத் தடுக்க இந்த டிசிவி தடுப்பூசி மிகவும் உதவும் என தாம் நம்புவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஜெனிவா நகரைச் சேர்ந்த காவி தடுப்பூசி நிறுவனத்தின் உதவியுடன் கடந்த இருவாரங்களாக தடுப்பூசி பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது.

சிந்து மாநிலத்தில் மட்டும் 9 மாதங்கள் முதல் 15 வயதுக்குள் இருக்கும் ஒரு கோடி பேருக்கு இந்த தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் கராச்சியில் 47லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

டிசிவி தடுப்பூசி 9 மாதம் முதல் 15 வயதுக்குட்டவர்கள் வரை ஆண்டுக்கு ஒருமுறை போடும் தடுப்பூசியாகும்.

இதேவேளை குறைந்தவிலையில், அதிக திறன் வாய்ந்த தடுப்பூசி இது எனவும் கூறப்பட்டுள்ளது.

1249 total views