சிரியாவின் வடக்கில் வந்திறங்கிய ரஷ்ய படைகள்

Report

சிரியாவில் முன்பு அமெரிக்க படைகளின் இராணுவ தளம் இருந்த இடத்தில் தற்போது ரஷ்யா தனது ஹெலிகொப்டர்களையும், படையினரையும் இறக்கி உள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

இதுகுறித்து ரஷ்ய இராணுவம் தரப்பில், தெரிவிக்கையில் சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள கமிஷிலி பகுதியில் முன்பு அமெரிக்க இராணுவ தளம் இருந்த இடத்தில் ரஷ்யா தனது இராணுவ தளத்தை அமைத்துள்ளதாகவும் அத்துடன் அங்கு தாக்குதலுக்காக ஹெலிகொப்டர்களும், ரஷ்ய படையினரும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

சிரியாவின் வடக்குப் பகுதியில் ரஷ்யாவின் ஆதிக்கத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கை இது என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் போர் அபாயப் பகுதியான இட்லிப்பில் சிரிய இராணுவம் மீண்டும் தாக்குதலைத் தொடங்கவுள்ளதாக சிரிய ஜனாதிபதி ஆசாத் தெரிவித்தார்.

முன்னதாக சிரியாவின் வடக்குப் பகுதியில் குர்து படைகள் மீது துருக்கி இராணுவம் தாக்குதல் நடத்தும் என அந் நாட்டு ஜனாதிபதி எர்டோகன் அறிவித்ததத் தொடர்ந்து அப்பகுதியிலிருந்து அமெரிக்க படைகளை ட்ரம்ப் வாபஸ் பெற்றார்.

சிரியாவில் ஜனாதிபதி ஆசாத்துக்கும் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்துவரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.

இதில் ஆசாத்துக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகின்ற நிலையில் ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன.

இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள கடைசி இடமான இட்லிப் பகுதியை மீட்க இறுதிச்சண்டை நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

2240 total views