இந்த ஊர்களில் வாகனங்கள் ஓட்ட தகுதி தேவை இல்லை!

Report

இந்தியாவின் மக்கள்தொகை உலக அளவில் இரண்டாம் இடம் உள்ளதால் இங்கு வாக்கங்களின் பயன்பாடு அதிகம். அதே சமயம் இட நெரிசலும் அதிகம் என்பதோடு போக்குவரத்துக்கான வாகனங்களும் அதிகம்.

அந்த வகையில் ஐரோப்பிய நாட்டில் உள்ள மிஸ்டர் ஆட்டோ எனும் நிறுவனம் உலகில் வாகனங்கள் ஓட்டுவதற்கு மோசமான சாலைகள் உள்ள நகரங்கள் மற்றும் வாகனங்கள் ஓட்டுவதற்கு ஏற்ற நகரங்கள் என பட்டியிலிட்டுள்ளது.

அந்த பட்டியலில் நகர சாலையில் உள்ள மேடு பள்ளம், தேவை இல்லாத சிக்னல்கள், வேகத்தடைகள், அதிகப்படியான டிராபிக் சிக்னல்கள், எரிபொருள் பயன்பாடு, அரசின் செயல்பாடு, சாலை மேம்படுத்துதல் ஆகியவைகளை கணக்கிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி வாகனங்கள் ஓட்ட மோசமான நகரங்களில் முதலிடத்தில் மும்பையும், இரண்டாம் இடத்தில் பாகிஸ்தானில் உள்ள கராச்சியும் மூன்றாம் இடத்தில் கொல்கத்தாவும் உள்ளது.

இதேபோல வாகனங்கள் ஓட்ட சொகுசு நகரமாக முதலிடத்தில் கண்டா நாட்டில் உள்ள கல்காரி நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டுளள்து.

இரண்டாம் இடத்தில துபாய் நகரமும், மூன்றாம் இடத்தில் கனடா நாட்டில் உள்ள ஒட்டாவா நகரமும் உள்ளது.

2108 total views