ஜெர்மனி விமான நிலையத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விமானங்கள்!

Report

ஜெர்மனி, ஃபிராங்க்ஃபர்ட் (Frankfurt) விமான நிலைய ஓடு பாதையில் இரு விமானங்கள் மோதிக்கொண்டன.

Air Namibia விமானம் தரையிறங்கும் வேளையில் Korean Air விமானத்துடன் நேற்று மோதியதில் யாருக்கும் காயமில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் இரு விமானங்களுக்கும் சேதம் ஏற்பட்டது. மாலை 6 மணி அளவில் நடந்த விபத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

Korean Air விமானத்தில் அப்போது 241 பயணிகளும் 40 ஊழியர்களும் இருந்தனர். இதனால், சோல் (Seoul) செல்ல வேண்டியிருந்த அதன் விமானம் 21 மணி நேரம் தாமதமடைந்ததாக Korean Air தெரிவித்துள்ளது.

பயணிகள் தங்குவதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் அது கூறியது. இன்று மதியம் வேறு விமானத்தில் பயணிகள் கிளம்பினர்.

ஃபிராங்க்ஃபர்ட்டிலிருந்து விண்ட்ஹோயக்கிற்குப் (Windhoek) பயணம் செய்யவிருந்த 244 பயணிகளுக்கு மாற்றுப் பயணத் தெரிவுகளை ஏற்பாடு செய்யும் வரை அவர்களுக்குத் தங்குமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக Air Namibia கூறியுள்ளது.

விபத்துக்கான காரணம் குறித்து ஜெர்மனியின் விமான விபத்து விசாரணைப் பிரிவு புலனாய்வைத் தொடங்கியுள்ளது.

542 total views