பிகினி உடையில் படையெடுத்த ஆண்கள்! எதற்கு தெரியுமா?

Report

ரஷ்யாவின் சமாரா என்ற பகுதியில் உள்ள ஒரு ஓல்வி என்ற பெட்ரோல் பங்கில் வேடிக்கையான மற்றும் வித்தியாசமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

இந்த பெட்ரோல் பங்கில் ஒரு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டது. அதாவது பிகினி உடை அணிந்து வருபவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு இலவச பெட்ரோல் ,டீசல் வழங்குவதாக கூறினர்.

இந்த சலுகை கேலிக்குரியது என சிலர் கூறினர் , மற்றவர்கள் இலவசமாக பெட்ரோல் நிரப்ப வாய்ப்பு கிடைத்தது என கூறினர். இந்த பெட்ரோல் பங்கிற்கு பெண்கள் இலவச எரிபொருளுக்காக பிகினி அணிந்து வருவார்கள் என அவர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், விசித்திரமான ஒன்று நடந்தது.இந்த அறிவிப்பை கேட்டதும் சில ஆண்கள் பிகினி உடைகளில் பெட்ரோல் பங்கிற்கு படையெடுத்தனர்.

அங்கு சில ஆண்கள் பிகினி உடைகளிளும் , சில ஆண்கள் ஹை ஹீல்ஸ் அணிந்து வந்து இலவசமாக எரிபொருளை பெற்று சென்றனர்.

பெட்ரோல் பங்கில் பிகினி உடைகளில் வந்த ஆண்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த பெட்ரோல் பங்க் அறிவித்த அறிவிப்பில் யார் பிகினி உடையில் வர வேண்டும் என குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

655 total views