சிரியா கார் குண்டுவெடிப்பில் 19 பேர் பலி

Report

சிரியாவின் வடக்கு பகுதியில் கார் வெடித்துச் சிதறிய சம்பவத்தில் 19 பேர் உயிரிழந்தனர்.

துருக்கி நாட்டு எல்லையோரத்தில் உள்ள சிரியா நாட்டின் வடக்கு பகுதியான அலெப்போ மாகாணத் துக்குட்பட்ட அல்-பாப் நகரில் பேருந்து நிறுத்தத்தின் அருகில் நின்று கொண்டிருந்த ஒரு கார் பயங்கரமாக வெடித்துச் சிதறியது.

இந்த சம்பவத்தில் 19 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். படுகாயமடைந்த 30க்கும் அதிகமானவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாக சிரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இச்சம்பவத்திற்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பு ஏற்காத நிலையில், ஒய்பிஜி அமைப்பு மீது துருக்கி குற்றம் சாட்டுகிறது.

223 total views