விமானத்தில் இருந்து குதித்த நபர் இருசக்கர வாகனத்தில் அமர்ந்தது எப்படி?

Report

ஆஸ்திரேலியாவில் விமானத்தில் இருந்து குதித்த பாராசூட் வீரர் ஒருவர், தரையிறங்கும் போது ஓடும் பைக்கில் இறங்கி சாகசம் செய்துள்ளார்.

நியூ சவுத் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த ஸ்காட் ஹிஸ்கோ என்ற பாராசூட் வீரர் புதிய சாகசம் செய்ய விரும்பினார். இதையடுத்து ஷெல்ஹார்பர் விமான நிலையத்தின் மேலே பறந்து சென்ற அவர் அங்கிருந்து கீழே குதித்தார்.

பின்னர், பாராசூட் உதவியுடன் கீழே இறங்கிய போது, விமானநிலையத்தின் ஓடுதளத்தில் ஹிஸ்கோவின் நண்பர் ராபி மேடிஸன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது சிறிதும் பிசகாமல் மேடிஸனின் மோட்டார் சைக்கிளில் இறங்கி ஹிஸ்கோ சாகசம் செய்தார்.

371 total views