இருப்பிடம் இல்லாத 1,500 பேருக்கு உதவிய போப் ஃபிரான்சிஸ்!

Report

இருப்பிடம் இல்லாத 1,500 பேருக்கு இலவச மதிய உணவளித்தார் போப் ஃபிரான்சிஸ். ரோமன் கத்தோலிக்கத் தேவாலயம் அதன் உலக ஏழைகள் தினத்தை அனுசரிக்கும் வகையில் விருந்து வழங்கப்பட்டது.

வத்திகனில் அமைந்துள்ள மண்டபத்தில் பழங்கள், காய்கறிகள், இனிப்புப் பண்டங்கள் என அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. இருப்பிடம், இல்லாதவர்களுக்குத் தினமும் உதவி செய்யும் அற நிறுவனங்களைச் சேர்ந்த தொண்டூழியர்கள் அவர்களை விருந்துக்கு அழைத்துச் சென்றனர்.

வசதி குறைந்தவர்களுக்கு இலவச மருத்துவ உதவி வழங்க கடந்த வாரம் முழுவதும் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடமாடும் மருந்தகம் ஒன்று அமைக்கப்பட்டது. ஆண்டு முழுவதும் வசதி குறைந்தவர்களுக்கு மருத்துவ உதவி வழங்கவும் போப் ஃபிரான்சிஸ் ஏற்பாடு செய்துள்ளார்.

நேற்று (நவம்பர் 17) நடந்த பிரார்த்தனையின் போது வசதி குறைந்தவர்களைப் பார்த்து எரிச்சல் கொள்ளாமல், அவர்களுக்கு உதவும் மனப்போக்கை மக்கள் கொண்டிருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் போப் ஃபிரான்சிஸ்.

314 total views