நாடு முழுவதும் இணைய சேவையை முடக்கிய ஈரான்!

Report

ஈரானில் வெடித்திருக்கும் போராட்டங்களை அடக்கும் விதமாக, நாடு முழுவதும் இணையதள சேவையை, அந்நாட்டு அரசு முடக்கியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை 300 விழுக்காடு அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக தலைநகர் தெஹ்ரான் உட்பட நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்கள், வாட்ஸ் ஆப், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் ஒருங்கிணைப்படுவதால் இணையதள சேவையை சனிக்கிழமை முதல், திங்கட்கிழமை நள்ளிரவு வரை முடக்கியிருக்கிறது.

முன்னெப்போதும் இல்லாத வகையில், மிகப்பெரிய அளவிலான இணைய சேவை முடக்கம் இது என ஆரக்கிள் நிறுவனத்தின் இணைய நுண்ணறிவு பிரிவு தெரிவித்திருக்கிறது.

335 total views