விமான தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஏர்பஸ் நிறுவனம், துபாய் ஏர்ஷோ விமான கண்காட்சியில், 30 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆர்டரை பெற்றுள்ளது.
புகழ்பெற்ற துபாய் ஏர்ஷோ துபாயில் கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடங்கியது. இதில், உலகின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனங்களான போயிங், ஏர்பஸ் உள்ளிட்டவை பங்கேற்றுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த எமிரேட்ஸ் விமான நிறுவனம், 50 ஏ350 ரக விமானங்களை 16 பில்லியன் டாலர்களுக்கு ஆர்டர் செய்துள்ளது. இதேபோல, ஏர் அரேபியா நிறுவனம் 120 ஏ320நியோ ரக விமானங்களை ஆர்டர் செய்துள்ளது.
இதன் மூலம் போட்டியில் போயிங்கைவிட ஏர்பஸ் முந்தியுள்ளது. அதேசமயம், வரும் வியாழக்கிழமை வரை துபாய் ஏர்ஷோ நடைபெற உள்ள நிலையில், புதிய ஆர்டர்களை பெற முடியும் என போயிங் உள்ளிட்ட நிறுவனங்கள் எதிர்பார்ப்பில் உள்ளன.