டிராவில் முடிவடைந்த கால்பந்தாட்ட போட்டியில் கைகலப்பு!

Report

பெரு கோப்பைக்கான கால்பந்தாட்ட போட்டியில் தோல்வியடைந்த அணியினர், நடுவர்களையும் எதிரணி வீரர்களையும் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கஸ்கோ பகுதியில் நடந்த டிபோர்டிவோ கார்சிலோசோ மற்றும் டிபோர்டிவோ லகுபாம்பா அணிகளுக்கு இடையேயான போட்டி டிராவில் முடிவடைந்ததை அடுத்து, கார்சிலோசோ அணி தொடரில் இருந்து வெளியேறியது.

இதனால், ஆத்திரமடைந்த அந்த அணி வீரர்களும் ரசிகர்களும், மைதானத்திற்குள்ளேயே நடுவர்களையும் எதிரணி வீரர்களையும் கடுமையாக தாக்க ஆரம்பித்தனர்.

இதையடுத்து, பாதுகாப்பிற்காக நின்றிருருந்த பொலிஸார் லகுபாம்பா அணி வீரர்களையும், நடுவர்களையும் மீட்டு பத்திரமாக அங்கிருந்து வெளியேற்றினர்.

357 total views