ரொவ் பிராந்தியத்தில் ஹெலிகொப்டர் விபத்து - மூவர் உயிரிழப்பு!

Report

மார்செ பெரு நகரத்துக்கு அருகே ரொவ் பிராந்தியத்தில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில், மூவர் உயிரிழந்துள்ளனர். தீயணைப்பு படையினருக்கு சொந்தமான இந்த ஹெலிகொப்டர் நேற்று விபத்துக்குள்ளாகியது.

இந்த ஹெலிகொப்டரில் பயணித்த விமானி, துணை விமானி, எஸ்.டி.எஸ் 13 பிரிவைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் என மூவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த ஹெலிகொப்டர், ரினேன் விமானத்தளத்தில் இருந்து புறப்பட்டு சில நிமிடங்களில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. வார் மாவட்டத்தில் வெள்ள மீட்புக்காக இந்த ஹெலிகொப்டர், புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

210 total views