பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து பேரணி!

Report

வடக்கு ஆப்ரிக்க நாடான துனிசியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து, ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துனிஷ் பகுதியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுபவர்களை தண்டிக்கும் சட்டங்களை மேலும் வலிமையாக்க வேண்டும் , குடும்ப சொத்தில் சம உரிமை அளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடைபெற்றது.

இதில், போராட்டக்காரர்கள் துடப்பம் மற்றும் சமையல் பாத்திரங்களை கையில் ஏந்தியவாறும், கோமாளிகள் போன்று வண்ணபொடிகளை பூசிகொண்டு முழக்கங்களை எழுப்பியவாறும் சாலையில் பேரணியாக சென்றனர்.

158 total views