லண்டன் கத்திக் குத்து தாக்குதலில் உயிரிழந்த நபர் தொடர்பில் கசிந்த தகவல்!

Report

லண்டன் பாலம் மீது உஸ்மான் கான் என்ற பயங்கரவாதியினால் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்து தாக்குதலில் உயிரிழந்த ஒருவர் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கத்திக் குத்து தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஒருவர் 25 வயதான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பட்டதாரி ஜாக் மெரிட் என தெரிய வந்துள்ளது.

கைதிகள் மறுவாழ்வு தொடர்பான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாநாட்டில் 28 வயதான உஸ்மான் கான் தாக்குதலைத் தொடங்கியபோது கொல்லப்பட்ட இருவரில் இவரும் ஒருவர்.

ஜாக் மெரிட் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் 2016 இல் சட்டத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.

பின்னர், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் படித்தார், அங்கு குற்றவியல் துறையில் இயங்கும் கைதகளுக்கான ஒன்றாக கற்றல் திட்டத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

865 total views