சீனாவின் இளம் சர்வதேசத் திரைப்பட விழாவின் வண்ணமிகு புகைப்படம்!

Report

2ஆவது ஹைநான் தீவுச் சர்வதேசத் திரைப்பட விழா டிசம்பர் 1ஆம் நாள் சான்யா நகரில் துவங்கியது.

ஹைநான் தீவுச் சர்வதேசத் திரைப்பட விழா 2018ஆம் ஆண்டில் முதல் முறையாக நடைபெற்றது. இது, சீனாவின் மிகவும் இளம் சர்வதேசத் திரைப்படத் திருவிழாவாகும்.

இவ்வாண்டின் விழாவில் தங்கத் தென்னை விருது எனும் புதிய போட்டி நிறுவப்பட்டது. தற்போது, 80 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 1495 திரைப்படங்கள் இவ்விருதுக்கான போட்டியில் கலந்து கொண்டுள்ளன.

டிசம்பர் 8ஆம் நாள் நடைபெறும் நிறைவு விழாவில் மிகச் சிறந்த திரைப்படம், மிகச் சிறந்த இயக்குநர் முதலிய 10 விருதுகள் அளிக்கப்பட உள்ளன.

249 total views